சாப்பாட்டுக்கடை - கோவிந்தா பவன்
என்னது கோவிந்தா பவனா? என்று யோசிப்பீர்கள். திருவல்லிக்கேணியில் இது போல பல வித்யாசமான பெயர்கள் கொண்ட பல மெஸ்கள் உண்டு. அதில் ஒன்று இது. திருவல்லிக்கேணி ரோடில் உள்ள ரத்னா கேப்பில் திரும்பி, அதை தாண்டி வரும் முதல் இடது பக்க ரோட்டில் நுழைந்தால் இருக்கிறது இந்த கோவிந்தா பவன்.நான் போன நேரம் மதிய நேரம். 40 ரூபாய்க்கு தயிரோடு நல்ல சாப்பாடு போட்டார்கள். சாதம், ரசம், கூட்டு, பொரியல், ஒரு அப்பளம், காரக்குழம்பு, சாம்பாருடன் நல்ல வீட்டுச் சாப்பாடு போல சுவையோடு கொடுத்தார்கள். சுவையில் பாரதி மெஸ்சுக்கு இணையாக இல்லாவிட்டாலும், குறை சொல்ல முடியாத வகையில் இருந்தது சாப்பாடு. பாரதி மெஸ்ஸை விட அளவு அதிகமாகவே கொடுத்தார்கள். நான் சென்ற நேரம் மதியம் மூன்று மணியிருக்கும் அப்போதே சாப்பாடு காலியாகிவிட்டது. இதை அறிமுகப்படுத்திய நண்பர் பாலாவுக்கு...
வெளியிட்டது: கேபிள் சங்கர்... - Friday, 27 January
- Currently no related articles
